முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் அடுத்த மாதம் இலக்கிய திருவிழா: மலாலா பங்கேற்கிறார்

புதன்கிழமை, 30 டிசம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

துபாய் : துபாயில் அடுத்த மாதம் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று பேசுகிறார்.

இது குறித்து துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

மலாலா யூசப்சையி (வயது 23) கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரில் தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இவர் தனது 12 வயதில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி ஒரு பெண்ணாக பள்ளிக்கு சென்றதால் தலிபான் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இந்த சம்பவம் அவர் ஒரு போராளியாக மாற வித்திட்டது. அதன்பின் லண்டனில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு உலக அளவில் பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காக இளம் வயதில் போராட ஆரம்பித்தார். இதற்காக தன் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவினார். தொடர்ந்து அவருக்கு 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் சார்பில், துபாய் கலாசாரம் மற்றும் கலை ஆணையத்தின் ஆதரவுடன் இலக்கிய திருவிழா நடத்தப்பட உள்ளது. வரும் ஜனவரி 29-ம் தேதி ஜமீல் கலை மையத்தில் தொடங்கும் இந்த விழா பிப்ரவரி 13-ம் தேதி அல்செர்கல் அவென்யூ வளாகத்தில் நிறைவடைகிறது.  இந்த விழாவில் இந்திய எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் சத்யார்த் நாயக் கலந்து கொண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து பேசுகிறார்.

மேலும் புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண் நாவலாசிரியர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அவ்னி தோஷி உள்ளிட்ட பல்வேறு படைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.  இதில் சிறப்பு விருந்தினராக நோபல் பரிசு பெற்ற இளம்பெண் மலாலா கலந்து கொண்டு பேசுகிறார். இதில் உலக அளவில் பெண்களின் நிலை, அவர்களது முன்னேற்றம் மற்றும் கல்வி குறித்து பேசுவார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து