முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2026      தமிழகம்
Sekarbabu-2023 04 06

சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டில் ரூ.100 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரூ, திருப்பதிக்கு இணைப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. 56 பஸ்கள் நிறுத்துவதற்கான வசதியும், ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேர் வரையில் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வசதிக்காக மலிவு விலை உணவகம், 2 தனியார் உணவகங்கள், போக்குவரத்து ஊழியர்கள் தங்கும் இடம், கலந்தாய்வு கூடம், கழிவுநீர் வெளியேற்று நிலையம், முதலுதவி சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகின்றன. இந்த புதிய பஸ் நிலையம் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். குத்தம்பாக்கம் பஸ் நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

தி.மு.க. ஆட்சியில் எது செய்தாலும் அதில் குற்றம் காண்பது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வழக்கமாகிவிட்டது. மகளிருக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ஆகியவற்றால் தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராக உள்ளது. எங்கேயாவது ஏற்படும் சிறிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே, விமர்சனங்களை பொருட்படுத்தாமல் மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து