முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2026      இந்தியா
EPS 2020 11-16

புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள். அவர்களுடனும் பேசி முடித்த பிறகு தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட முடியும் என்று டெல்லியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. மீண்டும் இணைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி மத்திய அமைச்சர்  அமித்ஷா முன்னிலையில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முடிவானது.

இதையடுத்து தமிழகத்தில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர்  பியூஸ் கோயல் தலைமையிலான குழுவை பா.ஜனதா தேசிய தலைமை அமைத்தது. அந்த குழுவினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா 3 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருச்சியில் அவரை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அமித்ஷா, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை 10 நாட்களுக்குள் இறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நேற்று முன்தினம் இணைந்தது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ம.க. இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்னவெல்லாம் செய்வது? என்பது பற்றி உள்துறை அமைச்சர்  அமித்ஷாவுடன் ஆலோசிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில் டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள மத்திய அமைச்சர்  அமித்ஷாவின் இல்லத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அடுத்த சில நிமிடங்களில் அமித்ஷாவுடன் சந்திப்பு நடந்தது. கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடு விவகாரங்கள், இன்னும் கூட்டணியில் இடம்பெற வருகை தரும் கட்சிகள் பற்றிய விவரங்கள் பற்றி அவர்கள் பேசியதாக தகவல் வெளியானது.

இந்த சந்திப்பு குறித்து டெல்லி விமான நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழக முதல்வர் அறிவித்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டமானது அரசு ஊழியர்களை ஏமாற்றக்கூடிய ஒரு நாடகம். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு கிடையாது, அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைதான் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள். 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அந்த வாக்குறுதிதான் அளிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில்தான் பெயரை மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து பேசப்படவில்லை. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்தார். பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள். அவர்களுடனும் பேசி முடித்த பிறகு தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட முடியும்.

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேருவதற்கு வாய்ப்பு கிடையாது. அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடாது என்று அமித்ஷா உறுதியளித்துள்ளார். அதுபோன்றுதான் தற்போது வரை நடந்து கொள்கிறார்கள். டெல்லி தமிழகத்தை ஆட்சி செய்யக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைபாடும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை. நாங்கள்தான் ஆட்சி செய்வோம். அமித்ஷாவோ, எடப்பாடி பழனிசாமியோ பெரியவர்கள் கிடையாது, மக்கள்தான் பெரியவர்கள்.” எனத் தெரிவித்தார். அ.ம.மு.க. கூட்டணிக்கு வருமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவரத்தை நடைபெறுகிறது, இறுதி செய்யப்பட்டவுடன் தெரிவிக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து