உத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா கண்டனம்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
Yeddyurappa 2021 01 10

Source: provided

மும்பை : மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதற்கு எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மராட்டிய எல்லையையொட்டி கர்நாடக ஆட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இந்த கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மராட்டியம், கர்நாடகம் இடையே பல ஆண்டு காலமாக தகராறு இருந்து வருகிறது. 

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் தியாகிகள் தினத்தன்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில், “ கர்நாடக ஆக்கிரமிப்பு மராத்தி பேசுபவர்கள் வசிக்கும், பாரம்பரிய பகுதிகளை மராட்டியத்திற்கு கொண்டு வருவதுதான் மாநில எல்லை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்தவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். நாம் இந்த விவகாரத்தில் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். தியாகிகளுக்கு இந்த உறுதி மொழியுடன் மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். 

உத்தவ் தாக்கரேவின் இந்த கருத்தை கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தவ் தாக்கரேவின் கருத்து இந்திய யூனியன் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் எடியூரப்பா சாடியுள்ளார்.மேலும், இணக்கமான சூழலை கெடுக்கும் வகையில் உத்தவ் தாக்கரே பேசுவதாகவும் எடியூரப்பா வேதனை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து