எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு விதிகள் நேற்று முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம் சென்னையிலும் பல பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காய்ச்சல் முகாம்கள் மீண்டும் துவங்கப்பட்டு, கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா கல்லூரியின் மாணவர் விடுதி கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்பட அரசு அறிவித்துள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. சென்னையில் உள்ள விக்டோரியா கல்லூரியின் மாணவர் விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


