தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது

Gold-price 2020-11-10

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு சவரன் ரூ.34 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4 ஆயிரத்து 350 ஆக இருந்தது. 

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் பவுன் ரூ. 35 ஆயிரத்து 40-க்கு விற்றது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்ததால் பவுன் ரூ. 35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.  சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 34 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 4 ஆயிரத்து 350 ஆக இருந்தது.  வெள்ளி கிலோவுக்கு ரூ. 1000 அதிகரித்து ரூ. 72 ஆயிரத்து 900 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து