முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம்

திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

ஹஜ் புனித யாத்திரைக்கு செல்லும் முஸ்லிம்கள் கொரோனா தடுப்புக்கான 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிலுள்ள மெக்கா, மதீனாவில் ஹஜ் புனித யாத்திரைக்காக இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் வருடந்தோறும் சென்று வருகின்றனர். கடந்த வருடம் துவங்கிய கொரோனா பரவலால் ஹஜ் புனித யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், இந்த வருடம் ஹஜ் செல்ல சவூதி அரேபியா அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் முஸ்லிம்களுக்காக இந்திய ஹஜ் கமிட்டி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இக்கமிட்டி மத்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஹஜ் கமிட்டி அறிவிப்பின்படி இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்ல விரும்புபவர்கள் கொரோனா தடுப்புக்கான இரண்டாவது ஊசியும் செலுத்திக் கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதை செலுத்திக் கொண்டதற்கான மருத்துவச் சான்றிதழை அவர்கள் ஹஜ் கமிட்டிக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த வருடம் ஜூலை 19–ந்தேதி ஹஜ் யாத்திரை அமைய உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஹஜ் கமிட்டி சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளன. இதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வரையில் ஆகும். இதனிடையே சவூதி அரேபியா வருபவர்கள் விமானம் இறங்கியவுடன் 72 மணி நேரம் தனிமைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் ஹஜ் யாத்திரையின் மீதான குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை இன்னும் சவூதி அரேபியா அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து