Idhayam Matrimony

திரிணாமுல் காங். வேட்பாளர் சின்கா கொரோனாவுக்கு பலி : மம்தா பானர்ஜி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று  உயிரிழந்தார். அவரது மறைவால் கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இது குறித்து மம்தா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மிக மிக வேதனையாக இருக்கிறது. அதிர்ச்சி அடைந்தேன். கர்தாகா தொகுதியில் போட்டியிட்ட எங்கள் வேட்பாளர் காஜல் சின்ஹா கொரோனாவுக்கு பலியாகி விட்டார். அவர் தனது வாழ்க்கையை மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்தார்.

சளைக்காமல் பிரசாரத்தை மேற்கொண்டார். அவர் நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றினார். நாங்கள் அவரை இழக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும் அவரது அதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.  இவ்வாறு மம்தா கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து