முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி மே 1-ல் இந்தியாவுக்கு வந்து சேரும்

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மே 1-ம் தேதி இந்தியாவுக்கு வந்து சேரும் என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதன்படி, கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.   உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், நாட்டில் சமீப காலங்களாக கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன.  

இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்திருந்தது.  இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வருகிறது. 

ரஷ்யாவில் மட்டுமே இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 59 நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. கொரோனாவை தடுப்பதில் 91.6 சதவீதம் அளவுக்கு இந்த தடுப்பூசி வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இந்த தடுப்பூசியை வைத்திருந்து பயன்படுத்த முடியும்.

ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. இந்த நிறுவனம் ரஷ்யாவில் இருந்து முதல் கட்டமாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்து தருவதாக கூறி உள்ளது. 

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுதி மே 1-ம் தேதி இந்தியாவுக்கு கிடைக்கும் என ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவர்  கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார். இருப்பினும், முதல் தொகுதியில் எத்தனை தடுப்பூசிகள் இருக்கும் அல்லது அவை எங்கு தயாரிக்கப்படும் என்று அவர் குறிப்பிடவில்லை. முதல் டோஸ் மே 1-ம் தேதி வழங்கப்படும் என்றும், ரஷ்ய தடுப்பூசி  இந்தியா தொற்றுநோயிலிருந்து வெளியேற சரியான நேரத்தில் உதவும் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து