Gopal-Som 2021 05 02

Source: provided

கொல்கத்தா : வாக்கு எண்ணும் மையத்தில் நிகழ்ந்த நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஏஜண்ட் மயங்கி கீழே விழுந்தார்.  

மேற்கு வங்கத்தின் பனிஹாடி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரது ஏஜென்ட் கோபால் சோம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். 50 வயதுக்கு மேலான இவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது 50 வயதுக்கு மேற்பட்ட பலர் பொது இடங்களில் மூச்சுத்திணறலால் மயங்கி விழுவது அதிகரித்துள்ளதன் காரணமாக, இது அப்பகுதியில் கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து