முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகள் வருகை குறைவு: 4 சிறப்பு ரயில்கள் ரத்து

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      தமிழகம்
Image Unavailable

பயணிகளின் வருகை குறைவால் 4 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா இரண்டாம் அலை தற்போது வேகம் எடுத்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இதன் காரணமாக, குறிப்பிட்ட சில சிறப்பு ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பயணிகள் வருகை சரிந்த ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் 4 சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து அறிவித்துள்ளது.

கே.எஸ்.ஆர். பெங்களூரு - நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (07235) இன்று 5-ம் தேதியில் இருந்து முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் - கே.எஸ்.ஆர். பெங்களூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (07236) நாளை  6-ம் தேதியில் இருந்து முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர்- கண்ணூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06537) நேற்று முதல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் - யஷ்வந்த்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று (5-ம் தேதி) முதல் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து