முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை

புதன்கிழமை, 5 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : பெங்களூரில் கொரோனா பாதிப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்கப்படும் அவலம் நடைபெறுகிறது. 

பெங்களூரில் கொரோனா பாதிப்பு  நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் மருத்துவமனைகளில் படுக்கைகளை போலி பெயர்களில் பதிவு செய்து, அவற்றை கொரோனா நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்கும் கொடுமை நடப்பதாக பா.ஜ.க. எம்பியான தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். 

கர்நாடகாவில் கொரோனா தொற்று சுனாமி போல் பரவி வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் 80 சத்வீத  படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் 4,065 படுக்கைகள் பதுக்கப்பட்டிருப்பதாக தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். கொரோனா சிகிச்சை பெற சாமானிய மக்கள் தவித்து வரும் நிலையில் பணம் படைத்தவர்கள், பதுக்கப்பட்டுள்ள இப்படுக்கைகளை அதிக விலை கொடுத்து பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவறிழைத்த மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து