முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் இடம்பெறாத புவனேஷ்வர் குமார் - நடராஜன்

சனிக்கிழமை, 8 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார் அணியில் இடபெறவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றுக்கான கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று முன்தினம் பி.சி.சி.ஐ அறிவித்தது.

நடராஜன் இல்லை

விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணியில் ஜடேஜா, ஷமி, விஹாரி ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடமில்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

முழங்காலில் காயம் 

சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டதால் புவனேஸ்வர் குமாருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரரான டி. நடராஜன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். 30 வயதான நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின்போதே முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குக் காயம் பெரிதானது.

அறுவை சிகிச்சை 

இந்த வருட ஐ.பி.எல்போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்குக் கடந்த மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதன் காரணமாகவும் இந்திய அணியில் ஏற்கெனவே பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ் எனப் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாலும் நடராஜனால் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போனது. 

மாற்று வீரர்கள்...

மேலும் மாற்று வீரர்களாக அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்ஸான் ஆகியோர் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்குத் தேர்வாகியுள்ளார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து