முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவின் மூத்த அரசியல்வாதி கே.ஆர்.கவுரி அம்மாள் காலமானார்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ஜனாதிபதிய சம்ரக்சனா சமிதியின் தலைவருமான கே.ஆர். கவுரி அம்மாள் நேற்று காலமானார். அவருக்கு வயது 101.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சில வாரங்களுக்கு முன்பு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் நேற்று காலை 7 மணிக்கு உயிரிழந்தார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுரி அம்மாளை, சமீபத்தில், கேரள முதல்வர் பினராய் விஜயனும், மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜாவும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.

கேரள மாநில அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிக்கும் கவுரி அம்மாள், மாநிலத்தில் நீண்ட காலம் அமைச்சராகப் பணியாற்றிய பெண் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.

1919-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி ஆலப்புழாவின் பத்தனக்காடு கிராமத்தில் கே.ஏ. ராமன் - பார்வதி அம்மா தம்பதிக்கு 7-வது மகளாக பிறந்த கவுரி அம்மாள், இளநிலைப் பட்டப்படிப்புடன் சட்டக்கல்வி படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து