எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கின் போது தொழிற்துறையினர் மற்றும் வணிகர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். அதில் ஆட்டோ-ரிக்ஷா மற்றும் கால்டேக்ஸி கள் சாலைவரி கட்டணங்கள் செலுத்த 3 மாதங்கள் அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பழக்கடைகள் செயல்படவும் அனமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1. சுயமுதலீட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியத்திற்கான திட்டமதிப்பீடு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 விழுக்காடு தொகை (ரூ.168 கோடி) நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியானஅனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
2. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறும்போது செலுத்தவேண்டிய (MOD) முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்படுகிறது. மே 2021 முதல் செப்டம்பர் 2021 வரை காலாவதியாக உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, தொழில் பாதுகாப்புத் துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வமான உரிமங்கள், டிசம்பர் 2021 வரைநீட்டிக்கப்படுகின்றன.
4. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கான முதலீட்டு மானியம் பெறுவதற்கு விற்றுமுதல் 25 விழுக்காடு அதிகரிக்க வேண்டுமென்ற விதிமுறையிலிருந்து ஏற்கெனவே 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்படுகிறது. இது 31-12-2021 வரை 9 மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
5. கடன் உத்தரவாத நிதிஆதாரத் திட்டம் (CGTMSE) மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் (Technology Upgradation Scheme) ஆகிய திட்டங்களின் கீழ் பெறப்பட்ட கடனுக்கான ஐந்து விழுக்காடு பின் முனை வட்டி மானியம் (BEIS) நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும். சிட்கோமனைகள், fast track அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு (Plot allotment) செய்யப்படும்.
7. சிட்கோ நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய மனை விலை, தவணைத் தொகை மற்றும் தொழிற்கூடங்களுக்கான வாடகை போன்றவற்றைச் செலுத்துவதற்கு, மேலும் ஆறு மாதகால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
8. அனைத்து மாவட்டங்களிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில், சிட்கோ தொழிற்பேட்டைகள், தொழிற் கூட்டுறவு சங்கங்கள் உள்பட பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்து, போடப்பட்டுள்ளது. தகுதியுடையஅனைவருக்கும் சிறப்புமுகாம்மூலம் கொரோனா தடுப்பூசி போட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
9. ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஆகியவற்றுக்கான சாலைவரி கட்டணங்கள் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து கட்ட அவகாசம் வழங்கப்படுகிறது.
10. சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ ரிக்ஷா, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை (EMI) கட்டுவதற்கும் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி (RBI) வலியுறுத்தப்படும்.
11. மே 2021ல் காலாவதியாகும் ஆட்டோ ரிக்ஷா, கால்டாக்சி போன்ற வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையை (Insurance Premium) செலுத்துவதற்குக் காலநீட்டிப்பு வழங்கக் கோரி மத்திய அரசும், IRDA அமைப்பும் வலியுறுத்தப்படும்.
12. மே 2021 மாதத்தில் காலாவதியாகும் தீயணைப்புத் துறை, தொழில்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் மூலம் பெறப்பட வேண்டிய சட்டரீதியான உரிமங்கள் (Statutory Licenses) மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்படுகிறது. இது குறித்து, உரிய ஆணைகள் வெளியிட சம்பந்தப்பட்ட துறைகள் இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
13. தொழில்துறை மூலம் வழங்கப்படும் மூலதனமானியம் (Capital Subsidy) மூன்று தவணைகளாக வழங்குவதற்குப் பதிலாக, மாநில தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, ஒரே தவணையாக, தொழில் வளத்தை கருதி வழங்க முடிவு செய்யப்படுகிறது.
14. பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில்வரியை செலுத்த மேலும் மூன்று மாதகால அவகாசம் வழங்கப்படுகிறது.
மேற்கூரிய சலுகைகளை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
03 Jul 2025புதுடெல்லி, டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசினார்.
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 82 பேர் பலி
03 Jul 2025ஜெருசலேம், காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்