முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.18 ஆயிரம் கட்டணம்: விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு பறந்த பயணி

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : கடந்த 19-ம் தேதி மும்பையிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட 360 இருக்கைகள் கொண்ட போயிங்777 ரக விமானத்தில் மும்பையைச் சேர்ந்த பாவேஷ் ஜாவேரி, தனியொருவராக பயணித்துள்ளார். இவர் தனது விமானப் பயணத்துக்கு ரூ.18,000 மட்டுமே கட்டணமாக செலுத்தியுள்ளார்.

பரபரப்பான இரண்டு விமான நிலையங்களை இணைக்கும் இந்த விமான சேவையை அன்றாடம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால், தற்போது கொரோனா காரணமாக பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஒரு போயிங் விமானத்தில் பயணம் செய்ய ஒரே ஒரு பயணி மட்டும் முன்பதிவு செய்திருந்தார். விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், அந்த ஒரு பயணிக்காக விமானத்தை இயக்கியுள்ளது.

மும்பையிலிருந்து துபாய்க்கு போயிங் விமானத்தை இயக்க ரூ.8 லட்சம் மதிப்புள்ள 17 டன் எரிபொருளை செலவாகும். இந்த ஒரே ஒரு பயணி இல்லை என்றாலும், இந்த விமானம் இயக்கி இருப்போம். ஏனென்றால், துபாயிலிருந்து மும்பை வரும் பயணிகளுக்காக மறுமார்கத்தில் இந்த விமானம் இயக்க வேண்டும் என விமான சேவை நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து