முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்: உ.பி. முதல்வர் யோகி தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை பணிக்கு உட்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கங்கை ஆற்றில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை வீசிய துயர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கங்கை நதியில் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

தற்போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை பணிக்கு உட்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிபுணர்கள் இதை கண்காணிக்கிறார்கள். 

முன்னதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஷிவ்பூரில் தடுப்பூசி பணிளை கள ஆய்வு செய்தார். இதையடுத்து மிர்சாபூரிலும் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுப் பணியின்போது, கங்கையில் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுவதை கண்காணிக்கும் வகையில் ஆளில்லா குட்டி விமானங்களை (டிரோன்) பயன்படுத்தும் திட்டத்தையும் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். டிரோன்கள், தனியே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பக் கூடியது. இந்த டிரோன்களை கொண்டு நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளின் சுகாதார பணிகளை கண்காணிக்கவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து