முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக தொடர்ந்து சரிவு

செவ்வாய்க்கிழமை, 1 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 1,748 கன அடியில் இருந்து 1,111 கன அடியாக சரிந்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த வாரம் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு வரும் நீர்வரத்து 1,748 கன அடியில் இருந்து 1,111 கன அடியாக சரிந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ள காரணத்தால், அணையின் நீர்மட்டம் மெல்ல குறைந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து