முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொலிவியா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே பயங்கர மோதல்: 2 பெண்கள் உட்பட 5 பேர் காயம்

புதன்கிழமை, 9 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பொலிவியா : மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியா நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.பி.க்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தலைநகர் லாபஸ் நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கமான கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது முன்னாள் இடைக்கால அதிபர் ஜியானான் மீதான கைது நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதன்மீதான விவகாரத்தில் உள்துறை அமைச்சர் பதில் அளித்துக் கொண்டு இருந்தார். அவரது பதிலில் திருப்தி அடையாத எதிர்கட்சியினர் முழக்கம் எழுப்பியபடி இருந்தனர்.

ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். விரைந்து வந்த சபை காவலர்கள் கைகலப்பில் ஈடுபட்ட எம்.பி.க்களை வெளியேற்றினர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 எம்.பி.க்கள் காயம் அடைந்தனர்.பெண் எம்.பி.க்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்.பி.க்களின் மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து பொலிவியா நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து