எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஹாங்காங் : கொரோனா நோயாளிகள் மற்றும் வயதானவர்களிடம் ஆறுதலாக பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஹாங்காங்கில் ‘கிரேஸ்’ என்ற பெண் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டிருப்பவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உதவும் வகையில், அவர்களை ஆறுதல்படுத்துவதற்கு, மனிதரைப் போல் உருவ அமைப்பு கொண்ட பெண் ரோபோவை ஹாங்காங்கில் டேவிட் ஹான்சன் என்பவர் உருவாக்கியுள்ளார்.
கிரேஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிரிப்பு, சோகம் உள்ளிட்ட மனித முக பாவனைகளை வெளிப்படுத்தும் வகையில் மனிதர்கள் பேசுவதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பதில் அளிக்கிறது.
கொரோனா நோயாளிகள் மற்றும் வயதானவர்களிடம் ஆறுதலாக பேசி அவர்களுக்கு தேவையான உதவிகள் ‘கிரேஸ்’ ரோபோ செய்யும். ஒரு செவிலியர்போல் பணிகளை செய்கிறது. ரோபோவில் பொருத்தப்பட்டு உள்ள கேமரா சென்சார் மூலம் எதிரே இருப்பவர்களின் உடல் வெப்பத்தை கண்டறிகிறது. கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதால் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும் என்று தெரிவித்துள்ளார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |