Idhayam Matrimony

அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நான் தான் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூர் : கர்நாடகத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்வராக  இருப்பேன் என்றும் எடியூரப்பா கூறினார்.

ஹாசன் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடியூரப்பா ஹாசனுக்கு வந்தார். பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஹாசனுக்கு வந்த அவர் அப்போது  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநிலத்தில் ஹாசன் உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. கொரோனாவால் மக்கள் உயிரிழப்பதற்கு அரசு தான் காரணம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி ரேவண்ணா கூறி வருவது கண்டிக்கத்தக்கது.

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் அரசு பொய்யான தகவல்களை தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம்சாட்டுகின்றன. கொரோனா தடுப்பு பணியில் பொய் சொல்வதால் அரசுக்கு என்ன லாபம்?.

அடுத்த 2 ஆண்டுகளும் நான் தான் முதல்வராக இருப்பேன். நான் தான் முதல்வராக  இருந்து மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவேன். பா.ஜனதா மேலிட தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளும் என் மீதுநம்பிக்கை வைத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை அனைத்து ரீதியிலும் வளர்ச்சி அடைய வைப்பேன். மாநிலத்தை நல்லபடியாக வழிநடத்துவேன். நல்ல முறையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து