முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்கள் கொண்ட தொடராக இருந்திருக்கலாம்: சச்சின் கருத்து

வியாழக்கிழமை, 17 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 3 ஆட்டங்கள் கொண்ட தொடராக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இன்று தொடக்கம்...

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டனில் இருக்கும் ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை ஏற்கெனவே இந்தியாவும், நியூசிலாந்தும் அறிவித்துவிட்டன. பல முன்னாள் வீரர்களும் இந்தியா - நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் நடத்திருக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

திருப்தி இருக்கும்..

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சச்சின் டெண்டுல்கர் " 50 ஓவர் அல்லது டி20 உலகக் கோப்பையில் விளையாடும் அணிகள் எப்படியாவது தங்களது க்ரூப்பில் இருக்கும் அணிகளுடன் ஒரு முறை மோதிவிடும். பின்பு காலிறுதி, அரையிறுதி என செல்லும். அப்போது ஒரு அணிக்கு முழுமையாக விளையாடிய திருப்தி இருக்கும். 

ஒரே ஒரு இறுதி...

அப்போது ஒரே ஒரு இறுதிப் போட்டி நடத்துவது சரியாக இருக்கும். ஆனால் இதில் ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகள், இங்கிலாந்துடன் 4 போட்டிகள் விளையாடிவிட்டு, இப்போது ஒரே ஒரு இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் விளையாடுவது சரி எனப்படவில்லை" என்றார் அவர்.

தனியொரு போட்டி...

மேலும் பேசிய சச்சின் டெண்டுல்கர் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடராக அமைந்திருக்க வேண்டுமே தவிர, தனியொரு போட்டியாக இருக்கக் கூடாது. அப்போதுதான் இரு அணிகளின் முழுமையான பலம் வெளிப்பட்டு இருக்கும். இப்போது முதல் முறை என்பதால் ஐசிசி பல விஷயங்களை யோசித்திருக்காது. இந்தப் போட்டி முடிந்ததும் அடுத்த முறை தொடர் போல நடத்த ஐசிசி யோசிக்கலாம்" என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து