முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானின் புதிய அதிபராக நீதிபதி இப்ராஹிம் ரைசி தேர்வானார் : 1988-ல் ஆயிரக்கணக்கானோருக்கு தூக்கு தண்டனை விதித்தவர்

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டெக்ரான் : ஈரான் நாட்டின் புதிய அதிபராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி தேர்வாகிறார். ஈரானின் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதிபர் பதவிக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் மைய வங்கியின் முன்னாள் தலைவர் அப்துல் உள்ளிட்ட 4 பேர் போட்டியிட்டனர். அதிபர் பதவிக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடைபெற்றது. ஈரானில் 5. 9 கோடி பேருக்கு வாக்குரிமை உள்ள போதும் 50 சதவீதத்திற்கும்  குறைவான வாக்குகளே பதிவாகின. அமெரிக்காவின் அணுஆயுத பரவல் தடை உத்தரவால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

விலைவாசி உயர்வு, பேச்சுரிமைக்கு எதிரான அடக்குமுறை, தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு சரிந்தது. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டன.  இதில் தொடக்கம் முதலே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி  இப்ராஹிம் ரைசி முன்னிலை வகித்து வந்தார். தேர்தலில் ரைசி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ள நிலையில், ஈரான் முன்னாள் அதிபர் அசன் ரூஹானி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈரான் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான இப்ராஹிம் ரைசி, அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர். ஈரான் மதத் தலைவர் ஆதரவாளராக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறார். ஈரான் அதிபர் பதவியை நெருங்கி உள்ள இப்ராஹிம் ரைசி, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர். 1988-ம் ஆண்டு ஈரான் அரசுக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியின் போது, கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கியவர் இப்ராஹிம் ரைசி. இதனால் இப்ராஹிம் ரைசியை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து