முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்கள், சி.ஏ.ஏ.வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்: முதல்வர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். 

தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி,  மூன்று  வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.  இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், உழவர் நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள உழவர் பெருமக்களின் உணர்வுகளையும், விருப்பத்தையும் இந்த மன்றம் முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது.   அதில் எந்த மாற்றமும் கிடையாது.  

ஆனால், இந்த அவையினுடைய முதல் கூட்டத் தொடர் என்ற முறையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான  விவாதத்தின் போது, இத்தகைய தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது என்று கருதுகிற காரணத்தினால்தான், வரவிருக்கக்கூடிய வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின் போது, அந்த உரிய தீர்மானத்தைக் கொண்டு வந்து, நிச்சயமாக ஒன்றிய அரசினுடைய  வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசினுடைய எதிர்ப்பை முழு மூச்சோடு பதிவு செய்து, அவற்றைத் திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதைப்போலவே, ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கக் கூடிய குடியுரிமை திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் இருக்கக் கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அதனையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக் கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதையும் தெரிவித்து அமைகின்றேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து