முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம்

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரவை கடந்த 7-ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதில் புதிதாக 43 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.  மூத்த அமைச்சர்கள் 12 பேர் ராஜினாமா செய்ததோடு, புதிதாக 43 பேர் கேபினட் அமைச்சர்களாகவும்,  இணை அமைச்சர்களாகவும் பதவியேற்று  கொண்டனர். அமைச்சரவையில் மொத்தம் 15 கேபினட் அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர், 28 பேருக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் வரும் 14-ம் தேதி (புதன்கிழமை) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 14-ம் தேதி கூடவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.  முன்னதாக, அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து