முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சலில் கொட்டித் தீர்க்கும் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய கார்கள், கட்டிடங்கள்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து மழை கொட்டித் தீர்ப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலமாக மழை பெய்கிறது. அது போலவே வட மாநிலங்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்கிறது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் மற்றும் பலத்த மழையில் சிக்கி 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது போல இமாச்ச பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், விடுதிகள் சேதமடைந்தன. கடைகள் சேதமடைந்தன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாக்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. டேராடூன் மாவட்டத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் சிக்கி கொண்டவர்களை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் கணித்துள்ளது.  இன்று மற்றும் நாளை மஞ்சள் வானிலை எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து