முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் அமைச்சரின் காலில் தொங்கும் முக கவசம் : புகைப்பட வைரலால் சர்ச்சை

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ராய்ப்பூர் : உத்தரகாண்ட் அமைச்சரான சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் முகத்துக்கு அணியும் முக கவசத்தை தனது காலில் மாட்டி இருந்தது வலைதளங்களில் வைரலானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  அம்மாநில அமைச்சரான சுவாமி  யத்தீஸ்வர் ஆனந்த் முகத்துக்கு அணியும் முக  கவசத்தை தனது காலில் மாட்டி இருந்தார். இது  தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனினும்,  பிஸான் சிங் சுப்பால், சுபோத் யூனியல் ஆகிய அமைச்சர்களும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். உடன் இருந்த அமைச்சர்கள் இருவரும் முககவசம் அணியாத நிலையில், காலில் முககவசத்தை மாட்டியிருந்த அமைச்சர் யத்தீஸ்வர் ஆனந்த்தை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கொரோனா மூன்றாவது அலை மற்றும் டெல்டா வகையை எதிர்கொள்ள எப்படி முக கவசம் அணிவது என யத்தீஸ்வர் ஆனந்த் வெளிப்படுத்தியுள்ளதாக டுவிட்டர் பயனாளி ஒருவர் கூறியுள்ளார்.    முககவசத்தை  தொங்கவிட மிகவும் தூய்மையான பகுதியை யத்தீஸ்வர் ஆனந்த் கண்டுபிடித்துள்ளார் என மற்றொரு நபர் விமர்சித்துள்ளர். முககவசத்தை எங்கு அணியவேண்டும் என அமைச்சருக்கு யாராவது எடுத்துக்கூறுங்கள் என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார். 

பொதுமக்களின் விமர்சனம் ஒருபக்கம் உள்ளநிலையில்,  காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளரான கரிமா தசவுனி, கொரோனா காரணமாக லட்சக்கணமாக மக்கள்  இந்தியாவில் உயிரிழந்துள்ள நிலையில், காலில் முககவசம் அணிந்தபடி பொதுமக்களுக்கு  எந்த வகையான கருத்தை சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் கூற வருகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து