முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் பலத்த மழை : ரயில் சேவை கடும் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மும்பையில் பெய்து வரும் பலத்த மழையை தொடர்ந்து அங்கு ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. அனைத்து சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.  தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் மழை கொட்டியது. மும்பை, தானே, நவிமும்பை, பல்ஹர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.  இடைவிடாத மழை காரணமாக ரயில் தண்டவாளங்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் உள்ளூர் ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ரயில்கள் நடுவழியிலும், ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன. ரயில் போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

அதே போல் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பஸ் மற்றும் மற்ற வாகனங்கள் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 3 மணி நேரத்தில் மும்பை நகரில் 3.6 செ.மீ. மழையும், கிழக்கு புறநகரில் 7.5 செ.மீ. மழையும், மேற்கு புறநகரில் 7.3 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மும்பை நகர் மற்றும் புறநகரில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்றும், புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து