முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவருடன் சித்து சந்திப்பு

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

காந்திநகர் : முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரை பஞ்சகுலாவில் உள்ள அவரது இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்தார். சித்துவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, நேற்று காலை முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரீஷ் ராவத்தை சந்தித்த நிலையில் சித்து மாநில காங்கிரஸ் தலைவரை சந்தித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உட்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்படவுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அமரீந்தர் சிங் முன்னிறுத்தப்படுவார். இந்நிலையில், தான் நவ்ஜோத் சிங் சித்து, மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரை சந்தித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து