எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா, 1999ஆம் ஆண்டு, ஆயுதம் வாங்கியபோது, 2 பில்லியன் டாலர் லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அது தொடர்பான, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் குற்றமற்றவர், தற்போதைய ஆட்சியாளர்கள் அவரைப் பழிவாங்க முயல்கிறார்கள், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகள், வணிக நிறுவனங்களுக்கு உள்ளே புகுந்து, பொருள்களைச் சூறையாடினர். கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தாக்குதல்களால் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தனது சகோதரர் மறைவு நிகழ்வில் கலந்துகொள்ள ஜேக்கப் ஜூமாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |