மாநிலங்களுக்கு கூடுதலாக 71 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

Federal-Ministry-2021-07-23

Source: provided

புது டெல்லி: மாநிலங்களுக்கு கூடுதலாக 71 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு கூடுதலாக 71 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு 43 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரத்து 190 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 41 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரத்து 353 டோஸ்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்கள் வசம் 2 கோடியே 75 லட்சத்து 19 ஆயிரத்து 837 டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாகவும், அதே நேரத்தில் கூடுதலாக 71 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படவிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து