பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? - ராகுல் காந்தி கேள்வி

Ragul 2021 07 23 0

Source: provided

புதுடெல்லி : பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தவறேதும் நடைபெறவில்லை என மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்தநிலையில் பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர்  இதுகுறித்து ராகுல் காந்தி கூறியதாவது:-

பணவீக்கம், பெகாசஸ், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இதனை பாராளுமன்றத்தில் விவாதித்தே ஆக வேண்டும்.

ஆனால் மத்திய அரசுக்கு இதனை விவாதிப்பதில் தயக்கம் இருக்கிறது. முக்கிய பிரச்சினையில் விவாதம் தேவை என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து