பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார்

Kalyani-Menon 2021 08 02

Source: provided

சென்னை : முன்னணி பாடகியாக வலம் வந்த கல்யாணி மேனன் தமிழில் 1979-ம் ஆண்டு 'நல்லதொரு குடும்பம் ' திரைப்படத்தில் ' செவ்வானமே பொன் மேகமே ' பாடலின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

தமிழில் பிரபலமடைந்த முத்து படத்தின் குலுவாலிலே, அலைபாயுதே படத்தில் அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஓமணப் பெண்ணே உள்ளிட்ட பல பாடல்கள் கல்யாணி மேனன் பாடியவை தான். அதிகம் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடியிருக்கிறார் . உடல்நலக் குறைவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பட்டவர் நேற்று மதியம் காலமானார். 

இவருக்கு இரண்டு மகன்கள் அதில் ஒருவர் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து