முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியினர் ஊழல் வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்தவர்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

பீகாரின் சமஸ்திபூரில் உள்ள பாரத ரத்னா கர்பூரி தாக்குர் கிராமத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமஸ்திபூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

”பீகாரில் நல்லாட்சியை வழங்க மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்போது பீகார் புதிய உத்வேகத்தில் நகரும். ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் என்ன சொல்கிறர்கள், என்ன செய்கிறார்கள் என்பது என்னைவிட உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை. அவர்கள் ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளிவந்தவர்கள்.

மகாராஷ்டிர மக்கள் எங்களுக்கு முன்பைவிட அதிக பெரும்பான்மை வழங்கினர். அரியாணாவில் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்துள்ளனர். ம.பி., குஜராத், உத்தரகண்டில் நீண்ட காலமாக பாஜக ஆட்சி உள்ளது. குஜராத்தில் இருபது ஆண்டுகளாக பாஜக உள்ளது. உ.பி.யில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறும் என்ற நிலைமையை பாஜக மாற்றியுள்ளது. இவை அனைத்து தே.ஜ. கூட்டணியின் நல்லாட்சி மற்றும் சேவையைக் குறிக்கிறது.

பீகாரில், நிதீஷ் குமார் தலைமையில் சொந்த சாதனையை முறியடித்து மிகப்பெரிய வெற்றியுடன் ஆட்சி அமைப்போம். பீகார் மக்கள் காட்டாட்சியை அகற்றி, 2005 ஆம் ஆண்டு நிதீஷ் குமார் தலைமையிலான நல்லாட்சி தொடங்கியது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் பல தடைகளை உருவாக்கியது. பீகார் மக்களை ஆர்.ஜே.டி. பழிவாங்குகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உதவ விரும்பினால், கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று காங்கிரஸை அச்சுறுத்தினர்.

தற்போது ஒரு கப் தேநீரைவிட ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் குறைவு என்ற நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதனை ’சாய்வாலா’ உறுதி செய்துள்ளார். பீகார் இளைஞர்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர். நீங்கள் உருவாக்கும் ரீல்ஸ்கள் மற்றும் அனைத்து படைப்பாற்றல்களும் எங்கள் அரசாங்கத்தால்தான் நடந்தது.

ஆர்.ஜே.டி. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து பீகாரின் அடுத்த தலைமுறையினர் அழிக்கப்பட்டனர். பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். தலித்துகளின் நீதிக்கான கதவுகள் மூடப்பட்டிருந்தன. பீகார் உள்பட முழு நாட்டையில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விடுவிப்பேன் என உறுதி அளித்தேன். பீகாரில் நக்ஸலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் முதுகை உடைத்துவிட்டோம் என்பதை நான் பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் முழு நாடும் விடுபடும். நவம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வருகிற 30-ம்  தேதி முசாபர்பூர், சாப்ரா ஆகிய நகரங்களில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பேசுகிறார். பின்னர் நவம்பர் 2, 3, 6 மற்றும் 7-ம்  தேதிகளிலும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து