முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஏ. சிறி கூறியுள்ளார்.

சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக ஆந்திரம் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் ஐதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற குளிர்சாதன வசதி கொண்ட தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் தீக்காயமடைந்தனர்.

இந்த கோர பேருந்து தீ விபத்து குறித்து கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஏ. சிறி கூறியதாவது: ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் பின்னர் பேருந்துக்கு அடியில் சென்று பேருந்தின் டீசல் டேங்கில் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. பேருந்து தீப்பிடித்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் தீ பரவியது.

இந்த சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 42 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 23 பேர் பலியாகினர், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 11 பேரின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்று விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கர்னூல் மாவட்டம் தண்டரபாடு கிராமத்தை சேர்ந்த டிவி9 காலனியைச் சேர்ந்த கிரானைட் தொழிலாளி சிவசங்கர் (21) பலியாகியுள்ளார். தீ வேகமாக பரவியபோதிலும், பேருந்தில் சிக்கிக் கொண்டு கூச்சலிட்ட பயணிகள் உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு பல பயணிகளை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுக்களின் கூட்டு முயற்சியால் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் நடைபெற்றன, அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

2 பேர் தமிழர்கள்

ஆந்திராவில் பேருந்து தீ பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த தலா 6 பேர், தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்த தலா 2 பேர், பீகார், ஒடிசாவைச் சேர்ந்த தலா ஒருவர், அடையாளம் காணப்படாத ஒருவர் என 23 பேர் உயிரிழந்தனர். பேருந்து தீ பிடித்த போது, தப்பி ஓடிய ஓட்டுனர்கள் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து