தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு

Gold-raye-2021-07-2021

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. ஒரு நாள் குறைந்தால் மறுநாள் அதிகரித்து ரூ.36 ஆயிரத்திலேயே நீடித்து வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ. 36,384க்கு விற்பனையானது. 

இந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது. நேற்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4,536க்கு விற்பனையானது. அதன் படி, சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36,288-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,100-க்கும் விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து