தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

Corona 2021 06 15

Source: provided

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,949- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  குறைந்து வந்தது. இந்த நிலையில், நேற்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.  நேற்று முன்தினம் பாதிப்பு 1,908- ஆக பதிவாகி இருந்த நிலையில், நேற்று 1,949- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,67,401- ஆக உயர்ந்துள்ளது.  

 

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று  குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,011- ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று 38- பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கண்டறிய  ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 635- மாதிரிகள் உள்ளன.  சென்னையில் நேற்று 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றுடன் சிகிச்சை உள்ளவர்கள் எண்ணிக்கை 20,117- ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து