முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்சார்பு மிக்க இந்தியாவை உருவாக்குவதில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியம்: தமிழிசை

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

தற்சார்பு மிக்க இந்தியாவை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழக, இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழகத்தின் 78-வது தொடக்க விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இணைய வழியாக விழாவில் கலந்து கொண்டார். இதில்  அவர் பேசியதாவது:-

அறிவியலும், தொழில்நுட்பமும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பங்காற்றி வருகின்றன. பன்னெடுங்காலமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. கணிதம், வானியல், மருத்துவம், இயற்பியல், வேதியியல் இன்னும் பல துறைகளில் இந்தியா படைத்துள்ள சாதனைகளால் அறிவியல் துறை பெரிதும் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

நம்முடைய பெருமையையும், அறிவியல் துறைகளில் நாம் படைத்திருக்கும் சாதனைகளையும் மீண்டும் நிலைநாட்ட வேண்டிய தருணம் இது. இந்தியாவின் பெருமையை உலக அளவில் பறைசாற்ற வேண்டும். அதற்கான தகுதியும், திறமையும் இந்த நிறுவனத்திற்கு உண்டு.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார். தற்சார்பு மிக்க இந்தியாவை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியம். விஞ்ஞானிகளும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக அறிவியல் ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். பல்துறை ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து