முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகார் வழக்கு: சிறப்பு டி.ஜி.பி. கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: போலீஸ் அதிகாரிகள் எனக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியால் செயல்படுவதால், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. சுப்ரீம் கோர்ட்டில் கூறினார். ஆனால், அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

மாவட்ட எஸ்பி.,யாக இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்தார். சிறப்பு டி.ஜி.பி, அவரது மாவட்டத்திற்கு வந்த போது, மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எஸ்.பி., டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலரிடம் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. 

சிறப்பு டி.ஜி.பி. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவர் மீதும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 4 பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் 400 பக்க குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.

சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், எனக்கு எதிராக போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். காழ்புணர்ச்சியால் போலீஸ் அதிகாரிகள் செயல்படுவதால் வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்காது. என் மீதான பாலியல் வழக்கை தமிழகத்தில் விசாரிக்க வேண்டாம். வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.  ஆனால், இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், விசாரணை நீதிமன்றம், வழக்கை சட்டப்படி மட்டுமே விசாரிக்க வேண்டும் எனக்கூறி சிறப்பு டி.ஜி.பி.யின் கோரிக்கையை நிராகரித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து