முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் டெல்டா வைரஸ் பாதிக்கும் : ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல்

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் டெல்டா வகை வைரஸ் பாதிக்கும் என ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் முதல்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, டெல்டா வகை கொரோனா வைரஸ் பிற வகைகளை காட்டிலும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. 

இதற்கிடையில் கொரோனாவில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள நாடு முழுவதிலும் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இரண்டு தவணை தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டவர்களுக்கு கூட கொரோனா தொற்று ஏற்படுகிறது.

இந்நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிக்கும் என சென்னையில் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வகை கொரோனா வைரஸ், தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத நபர்களையும் பாதிக்கும் திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு தவணை தடுப்பூசி போட்ட நபர்களையும் டெல்டா வகை வைரஸ் பாதிக்கும் எனவும் பாதிப்பின் பொழுது உயிரிழப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து