ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கண்புரை அறுவை சிகிச்சை

Ramnath-Govind 2021 07 23

Source: provided

புது டெல்லி: டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பு செயலாளர் அஜய் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று காலை கண்புரை நீக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிவடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நலமுடன் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்  என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து