முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத அமைப்புகளால் சிறிது காலம்தான் ஆதிக்கம் செலுத்த முடியும்: பிரதமர் மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

பயங்கரவாத அமைப்புகளால் சிறிது காலத்திற்கு மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் அதன் இருப்பு நிரந்தரமல்ல என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத்தின் மூலம் நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என்ற கொள்கையை பின்பற்றும் அமைப்புகளாலும் மக்களாலும் சிறிது காலத்திற்கு மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் அவர்களின் இருப்பு நிரந்தரமானது அல்ல என்றும் பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். 

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் அமையவிருக்கும் ஸ்ரீ சிவபார்வதி கோவிலுக்கு பிரதமா் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், 

சோம்நாத் ஆலயம் பல முறை இடிக்கப்பட்டுள்ளது.  கோவிலின் சிலைகள் பல முறை சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதை இருந்த இடம் தெரியாமல் அழிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகும் அது மீண்டெழுக்கப்பட்டுள்ளது. இது நமக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. 

அழிவை நோக்கி அழைத்து செல்லும் சக்திகளும் பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்களும் சில காலத்திற்கு ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால், மானுடத்தை அவர்களால் எப்போதும் அடக்கி விட முடியாது. அவர்களின் இருப்பு நிரந்தரமல்ல என்று கூறினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், மோடியின் இக்கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து