வங்கியை கொள்ளையடிக்க முயற்சி: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

Assam 2021 08 22

Source: provided

திஸ்பூர் : அசாமில் வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்ததாகக் கூறி காவல்துறையினர் மூவரை சுட்டு கொன்றுள்ளனர்.

அசாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்க சிலர் முயன்றுள்ளனர். அந்த முயற்சியை தடுத்து நிறுத்திய அம்மாநில காவல்துறையினர் மூவரை சுட்டு கொன்றுள்ளனர்.

இதுகுறித்து அசாம் காவல்துறை இயக்குநர் பாஸ்கர் ஜோதி மஹந்தா கூறுகையில், 

நேற்று முன்தினம் போட்கான் கிராமம் அருகே செங்மாரியில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் சென்றதையடுத்து காவலர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்குச்சூட்டில் மூன்று கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.

மற்ற மூவர் தப்பித்து விட்டனர். வாகனங்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து