முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 14-ம் தேதி பிரதமர் மோடி உ.பி. செல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 7 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி  : வரும் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். 

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜனதா  ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜனதா மேலிடத் தலைவர்கள் தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி விட்டனர். 

உத்தரபிரதேச தேர்தல் முடிவு அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் உத்தரபிரதேச வெற்றி முக்கியமானது என்று பா.ஜனதா கருதுகிறது. எனவே எப்படியாவது உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. 

உத்தரபிரதேசத்தில் அனைத்து கட்சிகளுமே இப்போது தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கி உள்ளன.  மஜ்லீஸ் கட்சி தலைவர் ஒவைசி ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். அதே போல பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் நேற்று பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 14-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் செல்ல உள்ளார். அலிகாரில் உள்ள ராஜா மகேந்திரசிங் பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.  இதை தொடர்ந்து  அரசியல் நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. தேர்தல் பணிகளின் ஒரு அங்கமாக அவர் அலிகாரில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து