முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் தலைவர்களின் படங்களை 2 மாதத்தில் நீக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் வாகனங்களில் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு படங்கள் ஒட்டப்பட்டிருந்தால், அந்த படங்களை 60 நாட்களில் நீக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ், ஐகோர்ட் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 

தமிழகத்தில் 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளனர். வழக்கறிஞர் என ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டியுள்ளவர்களில் பலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்கு இந்த ஸ்டிக்கர்கள் வாய்ப்பாக அமைகிறது.  வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

பக்கத்து மாநிலங்களில் அதிக அளவு சட்டக் கல்லூரி உருவாகத் தொடங்கியுள்ளது. அந்த கல்லூரிகளில் ரவுடிகள் பலர் பணம் கொடுத்து பட்டங்களைப் பெற்று வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் பயன்படுத்தி, தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து வருகின்றனர்.

எனவே, 2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஒட்டி, சட்டக் கல்லூரி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில், 

தமிழகத்தில் வாகனங்களில் வழக்கறிஞர் / பிரஸ் / போலீஸ் போன்ற ஸ்டிக்கர்கள் அதிகளவில் ஒட்டி உள்ளனர். இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் அதிக அளவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. இது குறித்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  இதே போல், தங்களது வாகனங்களில் அரசியல் கட்சியின் கொடிகள், தலைவர்களின் புகைப்படங்கள் சாதி கட்சி தலைவர்களின் படங்களை வெளிப்புறங்களில் தெரிவது போல் ஒட்டி பயன்படுத்தி வருகின்றனர். இது காவல்துறையினர் தங்களது வாகனத்தை நிறுத்தக் கூடாது, சோதனை செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் ஒட்டப்படுவதாக நீதிமன்றம் கருதுகிறது.

அரசியல் கட்சியினர் தங்கள் கொடிகளையும் தலைவரின் புகைப்படங்களையும் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம் மற்ற நேரங்களில் இதன் பயன்பாடு தேவையில்லாத ஒன்று என நீதிமன்றம் கருதுகிறது. மேலும், இதனை பயன்படுத்த சட்டத்திலும் அனுமதி இல்லை.  எனவே, இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. இந்த உத்தரவை டி.ஜி.பி, உள்துறை அமைச்சகம், போக்குவரத்து துறை இயக்குநர் ஆகியோர் வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 

வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றி வருடந்தோறும் உரிமம் புதுப்பிக்கப்படுகிறதா? வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள லைட் (முகப்பு விளக்கு) முறையாக பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  இதனை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது அபராதம் விதித்து முகப்பு விளக்குகளை அதிகாரிகள் நீக்க வேண்டும் .  வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் அல்லது நிறம் ஊட்டப்பட்ட கண்ணாடிகள் இருந்தால் அதனை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வாகனத்தின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை நீக்க வேண்டும்.  வாகனத்தின் நம்பர் போர்டுகள் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த உத்தரவை 60 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.  இவ்வாறு நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து