முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் காவல் அதிகாரிகளின் அதிகார வரம்புகள் மாற்றியமைப்பு: தமிழக அரசு அரசாணை பிறப்பிப்பு

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் மாநகராட்சிகளில் உள்ள போலீஸ் கமிஷனரங்களில் துணை கமிஷனர்களாக பணியாற்றுகிறவர்களின் பணிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில், திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், திருப்பூர், கோவை ஆகிய 5 மாநகராட்சிகளிலும் சென்னையைப் போல கமிஷனரகங்கள் இயங்குகின்றன. இந்த நகரங்களில் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ளவர்கள் கமிஷனர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கீழ் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ளவர்கள் துணை கமிஷனர்களாகவும், பின்னர் டி.எஸ்.பி. அந்தஸ்தில் உள்ளவர்கள் உதவி கமிஷனர்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் சென்னையைத் தவிர மற்ற மாநகரங்களில் பணியாற்றும் துணை கமிஷனர்களின் பணிகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

 

அதில் மதுரை மற்றும் கோவையில் மட்டும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, தலைமையிடம், ஆயுதப்படை ஆகிய 5 பிரிவுகளுக்கு தனித்தனியாக 5 துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி நகரங்களைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு ஒரு துணை கமிஷனர், குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்து என இரு பிரிவுக்கும் சேர்த்து ஒரு துணை கமிஷனர் என 2 துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் நகரத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து ஆகிய 3 பிரிவுக்கும் சேர்த்து ஒரு துணை கமிஷனர், தலைமையிடத்துக்கு மட்டும் ஒரு துணை கமிஷனர் என 2 துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து