சென்னை தனியார் குழுமத்திடமிருந்த ரூ. 2000 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Japier group 2021 09 18

Source: provided

சென்னை : சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில், ஜேப்பியார் குழுமத்தை சேர்ந்த கல்லூரியின் வசம் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி வசம் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த 91.04 ஏக்கர் அளவிலான இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வருவாய்த்துறை சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அண்மையில் நிலங்களை மீட்பதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. அதனடிப்படையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலையில் நிலம் மீட்புப் பணி நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,  அரசின் வளர்ச்சி பணிகளுக்கு தேவைப்படுவதால், நிலங்கள் மீட்கும் பணி தொடரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து