முக்கிய செய்திகள்

A Quiet Place Part 2 – விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
A-Quiet-Place-Part-2 2021 1

Source: provided

பயமுறுத்தும் பயங்கர திகில் படமாக வெளி வந்துள்ளது A Quiet Place Part 2 என்ற ஹாலிவுட் மூவி. அமெரிக்காவில் 60 மில்லியன் டாலர்களில் எடுக்கப்பட்ட இப்படம் வெளியான முதல்வார இறுதியில் 47.55 யு.எஸ். மில்லியன் டாலர்களை வசூலித்தது.

இதுவரை உலக அளவில் 297.1 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இதன் கதை முதல் பாகத்தின் இறுதியில், தந்தை இறந்து தனது குடும்பத்தையும் குழந்தையையும் ஏலியனிஸிடமிருந்து காப்பாற்றுகிறார்.

அதன் பின்னரும் அந்த குடும்பத்திற்கு தொல்லைகள் தொடர்ந்து வருகிறது. அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் கிளைமாக்ஸ். முதல் காட்சியில் ஏலியன்ஸ் ஊருக்குள் திடீரென வருகிறது.

பின்னர் அந்த இடத்திலிருந்து வேறு இடம் தேடி அந்த குடும்பம் பயணிக்க ஆரம்பிக்கிறது. அந்த பயணத்தை எதார்த்தமான காட்சிகளில் திகிலாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜான் கிரசின்சுகி. மொத்தத்தில் குலை நடுங்க வைக்கும் பின்னனி இசை கோர்ப்பில் உருவாகியுள்ள இந்த A Quiet Place Part 2 படம் அருமையான த்திரில்லர் மூவி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து