முக்கிய செய்திகள்

நவ. மாதத்திற்கான நுழைவுசீட்டு இன்று ஆன்லைனில் வெளியீடு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

thirupathi-2021-10-21

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்றும், இலவச தரிசன நுழைவுசீட்டு ஆன்லைனில் 23-ம் தேதியும் வெளியிடப்படவுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வெளி மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில்,  திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஒரு நாளைக்கு 12 ஆயிரம் வீதம் ஆன்லைனில் வெளியிடுகிறது. அதேபோல் சாதாரண பக்தர்களுக்கு 23-ம் தேதி இலவச தரிசன நுழைவு சீட்டுகளை தினமும் 10 ஆயிரம் வீதம் ஆன்லைனில் வெளியிடுகிறது. மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து