முக்கிய செய்திகள்

100 பழங்குடியினருக்கு தொழில் துவங்க ரூ. 50 லட்சம் மானியம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      தமிழகம்
tamilnadu-assembly--2021-08

Source: provided

சென்னை : பழங்குடியின பாரம்பரிய சமூக சுகாதாரத் திறன் பயிற்சி மூலம் சான்று பெற்றவர்களுக்கு சுயமாக தொழில் துவங்க ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் 100 நபர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்  2021-2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது சட்டமன்றப் பேரவையில் கீழ்க்கண்ட  அறிவிப்பினை வெளியிட்டார்.

பாரம்பரிய, சமூக சுகாதார திறன் 100 பழங்குடியின நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு 2 மாத களப்பயிற்சியோடு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.  சான்றிதழ் பெறுபவர்கள் சுயமாக தொழில் துவங்க ஏதுவாக உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட உதவிடும் வகையில் 100 பழங்குடியின பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.50 லட்சம் செலவில் மானியமாக வழங்கப்படும். 

பழங்குடியின மக்கள் சமுதாயத்தில் சுயமாக தொழில் செய்து முன்னேற்றம் அடையும் வகையில் பாரம்பரிய பழங்குடியின நடைமுறைகள் பின்பற்றி தொழில் துவங்க களிம்பு, மாத்திரை செய்யும் பொடிகள், கசாயம், லேகியம், மருத்துவ எண்ணெய், நெய் மற்றும் தேன் கலந்த மருந்துகள் இவற்றை பாரம்பரிய முறையில் மருந்துகளை தயாரிக்கவும், தயாரிக்கப்பட்ட மருந்துகளை சேமித்து வைத்திடும் பொருட்டும், பழங்குடியின பாரம்பரிய சமூக சுகாதாரத் திறன் பயிற்சி மூலம் சான்று பெற்றவர்களுக்கு சுயமாக தொழில் துவங்க ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் 100 நபர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து